Tuesday, January 5, 2010

மேல்பாப்பாம்பாடி கோயில் திருப்பணி

செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் பாதையில் உள்ள கிராமம் மேல்பாப்பாம்பாடி. இங்கு மெயின் ரோடின் அருகாமையில் அமைந்திருக்கும் பெரியநாயகி சமேத கரைகண்டேஸ்வரர் கோயில் மிகப்பழமை வாய்ந்தது. கடந்த ஐம்பது வருடங்களாக இந்த கோவிலில் வழிபாடு நடைபெறவில்லை. காஞ்சி காமகோடி ஆச்சார்யர்களின் அருளாசியுடன் ஊர் மக்களும், எங்கள் அறக்கட்டளையும் இணைந்து திருப்பணிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறோம்.
வாய் வழிச் செய்தி: வாழப்பந்தல் கிராமத்தில் அம்பாள் தவத்தில் இருந்தபொழுது ஒரு மாலைப்பொழுதில் முருகப்பெருமானை தண்ணீர் எடுத்துவரப் பணித்தாள். முருகப்பெருமான் தன் வேலாயுதத்தை செங்கம் முதல் போளூர் வரை படர்ந்து இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் செலுத்தினார். அங்கு தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகள் வேலாயுதத்தின் பெருமையால் மோக்ஷம் அடைந்து விட்டார்கள். ஆகவே மலையிலிருந்து தண்ணீர் குருதி ஆறாக பெருக ஆரம்பித்துவிட்டது.
இந்த ஆறு உமாதேவியின் விருப்பத்திற்கு ஏற்ப பரிசுத்தமான தண்ணீராக மாறிவிட்டது. இதனால் இந்த ஆறு முருகன் பெயரால் சேயாறு எனவும் குருதி பெருக்கால் செவ்வாறு எனவும் இப்பொழுது செய்யாறு எனவும் வழங்கப்படுகிறது.
செய்யாறுக்கு கிழக்கே இருக்கும் கோயில்களில் உள்ள சுவாமிக்கு கைலாசநாதர் என்றும் மேற்க்கே உள்ள கோயில்களின் சுவாமிக்கு கரைகண்டேஸ்வரர் என்ற பெயரும் உள்ளது.
6-3-2009 அன்று பாலாலயம் செய்யப்பட்டது. ஆச்சார்யர்களின் ஆசீர்வாதத்துடன் 22-11-2009 அன்று கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்து முடிந்தது.
பெரியவர்களின் கூற்றுப்படி புனர் உத்தாரண ( திருப்பணி ) கைங்கர்யத்தில் இயன்றவரையில் கலந்துகொண்டால் விதி மாறும், நன்மை பெருகும். கோவிலின் புகைப்படங்கள்
பாலாலயம் புகைப்படங்கள் 6-3-2009
கும்பாபிஷேக புகைப்படங்கள் 22-11-2009